Yaazhi Films

Where land and sea, time and space and other
such come together and play as Yaazhi!

ஆழி நிலம் காலம் வெளி என யாவையும் கூடி களித்தெழுந்தமையும் யாழி!

It is said that the first paintings date back to 45000 years ago; The first music composed 40000 years ago; the first literature written somewhere between 5000 to 7000 years ago; and the first drama staged around 2500 years ago.

But cinema, which unfolds all these forms within itself, can be traced back to no more than a century ago.

Yaazhi was created to be part of such instances in the evolution of cinema. And so, it is fate that cinema, which at every instance, expresses itself through multiple mediums, will exist even centuries after our existence.

As cinema joined the order of painting,poetry, music and drama, it has surpassed even its predecessors by providing opportunities without discrimination and has started to amplify the voice of the commons. Yaazhi was born out of the words of such voices.

In our land where multiple cultural components have survived for eons, Yaazhi will continue to set the trail for art in an imagined pluriverse.

முதல் ஒவியத்தின் அகவை நானூற்றி ஐம்பத்தைந்து நூற்றாண்டுகள் எனவும், முதல் இசையின் அகவை நானூறு நூற்றாண்டுகள் எனவும், முதல் இலக்கியத்தின் அகவை ஐம்பதிலிருந்து எழுபது நூற்றாண்டுகள் எனவும், முதல் நாடகத்தின் அகவை இருபத்தைந்து நூற்றாண்டுகள் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இவை அனைத்தையும் தன்னுள் இருத்தி விரியும் திரைப்படத்தின் அகவையை, மிக சரியாக ஒரு நூற்றாண்டு என சொல்லிவிட முடியும். எனவே, திரைப்படக்கலை, தன் திறன் இயல்பை வெவ்வேறு வடிவமைப்புகளாக முயன்று பார்த்துக் கொண்டேயிருக்கும் நிகழ்வினை, நம் காலம் தாண்டி இன்னும் பல நூற்றாண்டுகள் நிகழ்த்தி கொண்டிருக்கும் என்பது திண்ணம்.

அதன் அத்தகைய நிகழ்வுகள் அனைத்திலும் பங்குகொள்ளும் பேராவாவின் விளைவாக தொடங்கப்பட்டதே யாழி (திரைப்பட நிறுவனம்). இயல் இசை நாடகம் என்றிருந்த வரிசையில், திரைப்படக்கலையும் இணைந்த பின்பு, வகைபிரிவில்லாமல் எல்லா மக்களும் எல்லா கலைகளையும் உய்த்தறிவதற்கான வேகமும் வாய்ப்பும் பெருகத் துவங்க, அப்பெருக்கத்தின் போக்கு மக்கள் கலைகளை அணுகும் முறையை, இயல் உலகிற்கு உரக்கச் சொல்லியது.

உரத்த அக்குரலின் சொற்களிருந்து பிறந்தது தான் யாழி. பன்னெடுங்காலங்களாக பல பண்பாட்டுக் கூறுகள் உயிர்த்துப் வளர்ந்த நம் நிலத்தின் கலைகள் யாவும் அதன் இயல்பில் உரு பெற யாழி தடம் அமைத்துக் கொண்டேயிருக்கும்.

contact@yaazhifilms.com

Copyright © 2021 Yaazhi Films.